Home இலங்கை சமூகம் யாழில் 35க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து மில்லியன் கணக்கில் திருட்டு

யாழில் 35க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து மில்லியன் கணக்கில் திருட்டு

0

யாழில் 300 தங்கப்பவுணுக்கும் மேற்பட்ட நகையையும் சுமார் 60 இலட்சம் ரூபாய் பணத்தினையும் திருடிய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்றையதினம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவிர விசாரணை

“யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மாணிப்பாய் போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2022 ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தினை திருடிச் செல்லும் சந்தேகநபர் குறித்து நாங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு இருந்தோம்.

இது தொடர்பான தகவல்களை திரட்டி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக, வடக்கு மாகாண பிரதீப் பொலிஸ்மா அதிபர் திலக்சீய தனபால மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா காளிங்க ஜயசிங்க ஆகியோர் எனது தலைமையிலான குழு ஒன்றினை நியமித்தனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மற்றும் யாழ். பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு அதிகாரிகளை நியமித்து இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கணினி மூலமான வரைபடத்தை தயாரித்து அது தொடர்பாக விசாரணை செய்து குறித்த திருடனை கொழும்பில் வைத்து கைது செய்தோம்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version