Home இலங்கை அரசியல் கிழக்கில் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம்: சற்றுமுன் சபையில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

கிழக்கில் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம்: சற்றுமுன் சபையில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

0

கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார். 

நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போது சற்றுமுன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அகற்றும் நடவடிக்கை

கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் இடம் என்ற பெயர்ப் பலகைகளை சனிக்கிழமை மாலை பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட குழுவினர் மற்றும் பொது மக்கள் இணைந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சட்டம் அனைவருக்கும் சமம். சட்டத்தை கையிலெடுத்து இந்த செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே சட்டம்

வடக்கு, கிழக்கிற்கும் தெற்கிற்கும் ஒரே சட்டம் தான். அதனை எவரும் மீறக்கூடாது. ஏற்கனவே பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version