Home இலங்கை அரசியல் முன்னாள் அமைச்சர்களின் ஆடம்பர வீடுகளை பரிசோதித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் அமைச்சர்களின் ஆடம்பர வீடுகளை பரிசோதித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

0

முன்னைய அரசாங்கங்களின் காலங்களில் அமைச்சர்கள் பயன்படுத்தி ஆடம்பர வீட்டுத் தொகுதிகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு -07 பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர்கள் குடியிருந்த ஏராளமான ஆடம்பர வீட்டுத் தொகுதிகள் தற்போதைக்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

ஆடம்பர வீட்டுத் தொகுதி

இந்நிலையில் குறித்த வீட்டுத் தொகுதிகள் அமைந்துள்ள பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்றைய தினம் (08) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் போது கொழும்பு-07 கெப்பிட்டிபொல மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதிகளை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.

குறித்த பயணத்தில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் கலந்து கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version