Home இலங்கை சமூகம் அமைச்சர் உபாலி பன்னிலகே தகுதியற்றவர் என்று உத்தரவிடக்கோரி நீதிமன்றில் மனு

அமைச்சர் உபாலி பன்னிலகே தகுதியற்றவர் என்று உத்தரவிடக்கோரி நீதிமன்றில் மனு

0

கிராமப்புற மேம்பாடு சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று அறிவிக்கக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக மற்றும் அரசியல் ஆர்வலர் ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின்படி, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டு பின்னர் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்ட நேரத்தில் ருஹுணு பல்கலைக்கழகத்தின் ஊழியராக இருந்தார் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகள்

நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குசானி அனுசா ரோஹணதீர ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

உபாலி பன்னிலகே ஒரு பொதுக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரியாக இருந்ததால் அரசியலமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கோ அவர் தகுதியற்றவர் என்று மனு வாதிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version