Home இலங்கை அரசியல் அமைச்சரவையில் மாற்றம்!

அமைச்சரவையில் மாற்றம்!

0

 இலங்கையில் அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் உயர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

பல்வேறு இன சமூகங்களையும், பிரதேசங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் அமைச்சரவையில் பதவிகள் வழங்குவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த திருத்தங்கள் செய்வது குறித்து இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை.

அமைச்சரவையில் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து உயர்மட்ட அடிப்படையிலான கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

NO COMMENTS

Exit mobile version