Home இலங்கை கல்வி வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் – அம்பலமான உண்மை

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் – அம்பலமான உண்மை

0

வடக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை சுற்றறிக்கை இடமாற்ற விதிகளுக்கு
முரணாக இடமாற்றம் இன்றி 35 கல்வி அதிகாரிகள் சேவையில் இருக்கின்றமை தகவல்
அறியும் சட்டமூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கை இலக்கம் 32/2022 2.1.2 இன் படி 12 வருடங்களுக்கு
மேலாக ஒரு மாகாணத்தில் கல்வி நிர்வாக அதிகாரிகளாக இருப்பார்களுக்கு பணி
இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் 19 வருடங்களாக 5 அதிகாரிகளும் 18 வருடங்களாக 3
அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக 12 வருடங்களுக்கு மேல் 35 அதிகாரிகளும் வடக்கு
மாகாணத்தில் தொடர்ந்து சேவையாற்றுகின்றனர். 

விசாரணை 

இவ்வாறு இடமாற்றம் இன்று ஒரு பகுதியினர் தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் தங்கி
இருப்பதால் வெளி மாகாணங்களில் இருந்து சேவை காலத்தை பூர்த்தி செய்த கல்வி
நிர்வாக சேவை அதிகாரிகள் வடக்கு மாகாணத்துக்கு வர முடியாத சூழ்நிலை
உருவாகியுள்ளது.

அது மட்டும் அல்லாது அவர்கள் வகிக்கும் பதவிகளுக்கு கீழ் உள்ளவர்கள் பதவி
உயர்வின் அடிப்படையில் உரிய பதவி நிலைகளை அடைவதில் கால தாமதங்கள்
ஏற்படுகின்றது.

இவ்வாறான நிலையில் சுற்றறிக்கைகளை மீறி கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளாக
தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் தங்கு இருப்பதால் பழிவாங்கல்கள், நிர்வாக
முறைகேடுகள் என்பன மேலோங்கி காணப்படும் அபாயங்களும் உள்ளன.

ஆகவே பொறுப்பு வாய்ந்தவர்கள் நிர்வாக சுற்றறிக்கைகளை உரிய முறையில் பின்பற்றி
உரிய காலப் பகுதியில் இடமாற்றங்களை வழங்குவது ஆரோக்கியமான கல்விச் சூழலை
உருவாக்கும்.

Source: https://ibctamil.com/article/ministry-of-education-teachers-transfer-circular-1778896176

NO COMMENTS

Exit mobile version