Home இலங்கை சமூகம் சர்வதேச அழகிப் போட்டி : முதலிடம் பிடித்த இலங்கை யுவதி

சர்வதேச அழகிப் போட்டி : முதலிடம் பிடித்த இலங்கை யுவதி

0

இந்தோனேசியாவில்(indonesia) நடைபெற்ற மிஸ் இன்டர்நஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்ற இலங்கையின்(sri lanka) திலினி குமாரி நேற்று இரவு(16) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்தோனேசியாவின் பாலி தீவில் உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி 09/09 முதல் 09/16 வரை நடைபெற்றது.

கட்டுநாயக்கவை வந்தடைந்த அழகி

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற திலினி, 09/16 இரவு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

பல்வேறு துறைகளில் திறமை

ஹனுவர, பிரிமத்தலாவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர், நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல்வேறு துறைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். 

NO COMMENTS

Exit mobile version