Home இலங்கை சமூகம் நடுக்காட்டில் காணாமல்போன குழந்தை கண்டுபிடிப்பு

நடுக்காட்டில் காணாமல்போன குழந்தை கண்டுபிடிப்பு

0

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டங்கன் தோட்டத்தில் காணாமல்போன நான்கு வயது குழந்தை காட்டுப்பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி லக்சபான பிரதேசத்தில் வசிக்கும் சிவநாதன் அபிலாஷ் என்ற குழந்தை தனது பெற்றோருடன் உறவினர் வீடொன்றுக்கு திருமண நிகழ்விற்கு வந்திருந்த நிலையில் காணாமல்போயுள்ளது.

குழந்தை (17) மதியம் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், பின்னர் உணவு கொண்டு வந்தபோது, குழந்தை அந்த இடத்தில் இல்லை என்றும் தந்தை தெரிவித்துள்ளார்.

சட்ட வைத்தியர் விசாரணை

குழந்தை காணாமல்போனமை தொடர்பில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 119 பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அறிவித்ததையடுத்து, நோர்வூட் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட மக்கள் கடந்த 18ஆம் திகதி காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது குழந்தை அருகில் இருந்த வனப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும், பின்னர் வீடு திரும்ப முடியாமல் காட்டில் தவித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குழந்தை கண்டுபிடிக்கப்படும் போது பசியுடன் இருந்ததாகவும், நோர்வூட் பொலிஸார் குழந்தைக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கியதன் பின்னர், மேலதிக பரிசோதனைக்காக குழந்தையை திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version