Home இலங்கை சமூகம் யாழ். நகரில் மீட்கப்பட்ட காணாமல் போன பிரான்ஸ் பிரஜை

யாழ். நகரில் மீட்கப்பட்ட காணாமல் போன பிரான்ஸ் பிரஜை

0

அநுராதபுரத்தில் (Anuradhapura) காணாமல் போன வெளிநாட்டு பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரஜை யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றையதினம் (28.1.2025) காவல்துறை புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில்
அவர்களில் ஒருவர் நேற்றையதினம் காணாமல் போயுள்ளார்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

இது குறித்து அநுராதபுர
காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜை நேற்றையதினம், யாழ்ப்பாணம் மாவட்ட
சிரேஷ்ட அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினரால்
யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

செய்திகள் – கஜிந்தன்


YOU MAY LIKE THIS


https://www.youtube.com/embed/4tYg9ZJNu68

NO COMMENTS

Exit mobile version