Home இலங்கை சமூகம் காணாமல் போன பெண்ணொருவர் காட்டுப்பகுதிக்குள் மீட்பு

காணாமல் போன பெண்ணொருவர் காட்டுப்பகுதிக்குள் மீட்பு

0

கிண்ணியாவில் நேற்று (14) காலை கண்டல் காட்டுப் பகுதிக்குச் சென்ற
பின்னர் வீடு திரும்பாத நிலையில் காணாமல் போன தாயொருவர் இன்று காலை
மீட்கப்பட்டுள்ளார்.

தொலைந்த நிலையில் குடும்பத்தினரால் தேடப்பட்ட அந்த பெண், இன்று காலை
முத்துநகர் பகுதியில் இருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்து
வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் எச்சரிக்கை

 வழி மாறிப்போனதால், அந்தப் பெண் வழி தவறி கண்டல் காடுகளுக்குள்
நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் சிறிய அளவில்
களஞ்சல் நீரும், சிக்கலான மண் வழிகளும் இருப்பதால், வெளியேறும் வழியை அடையாளம்
காண முடியாமல் தவித்திருக்கலாம்.

இந்நிலையில், தற்போது அவர் வீட்டில் நலமாக இருப்பதுடன், இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்கள்
எச்சரிக்கையாக செயல்படுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version