Home இலங்கை சமூகம் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்

வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்

0

இலங்கை அரச படைகளினால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்கு நீதி கோரி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் கவனயீர்ப்பு போாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது, அனைத்துலக வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) முன்றலில் நாளை (30.08.2024) நண்பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளது. 

உரிய நீதி

இத்தனை ஆண்டுகளாகியும் தொடர்ந்து அலைக்களிக்கப்படும் எங்கள் தாய்மாருக்கும், உறவுகளுக்கும் உரிய நீதி எதனையும் வழங்கிடாது இலங்கை அரச கட்டமைப்பிற்கு தமது கூட்டு ஒருமைப்பாட்டினை உணர்த்துவதற்கும் ஒன்று திரள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகமாக உணர்வுரிமையோடு அனைவரும் அழைக்கபப்பட்டுள்ளனர்.

அத்துடன், “நீதிக்கான பயணம்” எனும் தொனிப்பொருளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட சித்திர கண்காட்சி மட்டக்களப்பு (Batticaloa) நகரில் அமைந்துள்ள
காந்தி பூங்காவில் இன்று (29.08.2024) இடம்பெற்றுள்ளது.

அந்தவகையில், கடந்த கால யுத்தத்தின்போது காணாமல் போயுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட
குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அக்காலச் சூழலில் தங்களுடைய மனங்களில்
உட்கிடக்கைகளாக பதிந்த பல விடயங்களை சித்திரங்களாக வரைந்து இங்கு
காட்சிப்படுத்தியுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version