Home இலங்கை குற்றம் அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் காணாமல் போன பித்தளை கலசங்கள் மீட்பு

அனலைதீவு ஐயனார் ஆலயத்தில் காணாமல் போன பித்தளை கலசங்கள் மீட்பு

0

அனலைதீவு ஐயனார் கோவிலில் திருடப்பட்ட பித்தளை கலசங்கள் ஊர்காவற்துறை
பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் 06 பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன.

இது
குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கை

அந்தவகையில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரனவின்
தலைமையிலான குழுவினர் நேற்றையதினம்(01) சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் 06
கலசங்களையும் மீட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/missing-things-recovered-from-temple-1748833833

NO COMMENTS

Exit mobile version