Home இலங்கை அரசியல் அரியநேத்திரனை பிரசாரத்திற்கு அழைக்கக்கூடாது: சாணக்கியனின் ஒலிப்பதிவால் சர்ச்சை

அரியநேத்திரனை பிரசாரத்திற்கு அழைக்கக்கூடாது: சாணக்கியனின் ஒலிப்பதிவால் சர்ச்சை

0

இலங்கை தமிழரசு கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு அரியநேத்திரனை அழைக்கக் கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஒலிப்பதிவில் சாணக்கியன்(shanakiyan) தெரிவித்ததாவது,

“அரியநேத்திரன் (ariyanethran)கட்சியால் இடைநிறுத்தப்பட்டவர். அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. அவருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அவரை கட்சியின் நிகழ்வுகளுக்கு அழைக்கக்கூடாது என மத்திய குழுவின் தீர்மானம் உள்ளது.

 அழைப்பவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்

இவற்றையெல்லாம் தாண்டி அவரை கட்சிக் கூட்டங்களுக்கு அழைப்பவர்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.மாவட்டக் கிளைத் தலைவராகவோ, அல்லது வேட்பாளராகவோ நான் இதற்கு பதில் சொல்ல முடியாது.

நான் செய்யவில்லை

அதற்கு பொறுப்பானவர்களிடம் நீங்கள், கட்சியால் இடைநிறுத்தப்பட்டவரை, கட்சியால் நீக்கப்பட வேண்டிய ஒருவரை, கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குள் உள்வாங்கப்பட்ட ஒருவரை கட்சியின் நிகழ்வுக்கு அழைப்பதை நான் செய்யவில்லை” என சாணக்கியன் அந்த குரல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சிறிநேசனுக்கு ஆதரவாக அரியநேத்திரன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version