Home இலங்கை குற்றம் மித்தெனியவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள உலகப் புள்ளிகள்! பொலிசாருக்கு ஏமாற்றம்

மித்தெனியவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாதாள உலகப் புள்ளிகள்! பொலிசாருக்கு ஏமாற்றம்

0

தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற முக்கொலை குறித்த வழக்கின் சாட்சியங்களை சேகரித்துக் கொள்ள சென்ற பொலிசார் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

தென்னிலங்கையின் மித்தெனிய பிரதேசத்தில் மித்தெனிய கஜ்ஜா என்றழைக்கப்பட்ட பாதாள உலக செயற்பாட்டாளர் மற்றும் அவரது இரண்டு புதல்வர்கள் சில மாதங்களுக்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டின் மூலம் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

பொலிஸாருக்கு ஏமாற்றம் 

குறித்த கொலையுடன் தொடர்புடைய பெக்கோ சமன் என்பவர் அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோரை அழைத்துச் கொண்டு கொலைச் சம்பவத்தின் விபரங்களைத் துப்புத் துலக்கவும், சம்பவத்துக்குப் பயன்பட்ட துப்பாக்கியை கைப்பற்றி, மேலும் சந்தே நபர்களைக் கைது செய்யவும் கொழும்பில் இருந்து மித்தெனிய சென்ற பொலிசார் வெறுங்கையுடன் பலத்த ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கியைத் தேடிக் கொள்ள முடியாமல் போயுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களும் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version