Home இலங்கை குற்றம் காலி சிறைச்சாலையிலிருந்து தொலைபேசிகள் மீட்பு

காலி சிறைச்சாலையிலிருந்து தொலைபேசிகள் மீட்பு

0

காலி சிறைச்சாலையிலிருந்து தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலையின் எச் விடுதியில் இவ்வாறு தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மூன்று தொலைபேசிகளும், நான்கு மின்னேற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.

விசாரணை

இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஆரம்பித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மூன்று மாதங்களில் காலி சிறைச்சாலையிலிருந்து 546 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக காலி பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version