Home தொழில்நுட்பம் கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கையடக்க தொலைபேசி பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகளும் தொலைபேசி அழைப்புகளும் வருவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

மோசடி நடவடிக்கைகள் 

போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெறுபவர்கள் பற்றி தமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த மோசடி நடவடிக்கைகள், பயனர்களின் தொலைபேசிகளுக்கு, பரிசுகளை வென்றுள்ளதாகவும் பல்வேறு தள்ளுபடிகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் போன்றவற்றை வழங்குவதாகவும் கூறி குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது அழைப்புகள் மூலமாகவோ மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்நிலையில், இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்காமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version