Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடமாடும் சேவை

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடமாடும் சேவை

0

முல்லைத்தீவு (Mullaitivu) – புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் ‘நானே ஆரம்பம், சிமாட்டோடு இணைந்து இலங்கையை வெல்வோம்’ எனும் தொனிப்பொருளிலான தொழில் மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்று
வருகின்றது.

குறித்த வேலைத்திட்டமானது, இன்றும் (03.05.2024) நாளையுமாக இரு தினங்களில்
நடைபெறவுள்ளது.

இதன்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த தெளிவூட்டல்கள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின்
முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், உத்தேச
தொழில்வாய்ப்புக்கள், சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வெளிநாடுகளில்
பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தங்கத்தின் விலையில் பதிவாகும் மாற்றம்: நகை கொள்வனவு செய்பவர்களுக்கான தகவல்

நடமாடும் சேவை

அதேவேளை, ருமேனியா, மத்திய கிழக்கு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஐரோப்பா நாடுகளில்
தொழில் ஒன்றை பெற்றுக் கொள்வது தொடர்பாக முகவர் நிறுவனங்களால்
தெளிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன. 

நிகழ்வில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார். 

மேலும், அதிதிகளாக கிராமியப் பொருளாதார இராஜாங்க
அமைச்சர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் வழித்தட அனுமதிக்கு எதிர்ப்பு – போராட்டத்தில் தனியார் சிற்றூர்தி சங்கம்

இவரைக் கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version