Home இலங்கை சமூகம் விவசாய உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!

விவசாய உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!

0

Courtesy: Subramaniyam Thevanthan

வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடலானது, வடமாகாண
ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்
நடைபெற்றுள்ளது. 

இதன்போது, விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைப்பது மற்றும் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான நவீன முறைகளை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

மேலும், குறித்த கலந்துரையாடலில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண விவசாய
அமைச்சின் செயலாளர், வடமாகாண நீர்ப்பாசன மற்றும் விவசாய பணிப்பாளர்கள், ஐந்து
மாவட்டங்களின் விவசாயப்பணிப்பாளர்கள், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், விவசாய
திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version