Home விளையாட்டு இலங்கை கிரிக்கெட் அணிக்குள் தமிழ் வீரருக்கு கிடைத்த அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட் அணிக்குள் தமிழ் வீரருக்கு கிடைத்த அங்கீகாரம்

0

இந்திய இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரில் தமிழ் பேசும் வீரர் ஒருவர் பங்குபற்றியமை கிரிக்கெட் ரசிகர்களிடையே தற்போது பேசுபோருளாகியுள்ளது.

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று(2) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியானது இறுதிவரை சென்று சமநிலையில் நிறைவடைந்தது.

ரி20 போட்டிகளில் 3 போட்டியிலும் இலங்கை அணி தோல்வியை தழுவியிருந்த நிலையில் இந்த முடிவானது இரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்ததென்றே கூறலாம்.

 முகமது சிராஸ்

இந்நிலையில், ஒருநாள் தொடரிலிருந்து பந்துவீச்சாளர்கள் துஷ்மந்த சமீரா, நுவான் துசாரா மற்றும் பினுரா பெர்னாடோ, மதீச பதிரண ஆகியோர் வெளியேறியிருந்தனர்.

இதன்காரணமாக உள்ளக ஒருநாள் தொடர்களில் சிறந்த பந்துவீச்சு பிரதியை வெளிப்படுத்திய முகமது சிராஸ்(Mohamed Shiraz) இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டார்.

நேற்றைய போட்டியில் முஹம்மத் சிராஜ் 4 ஓவர்களை வீசும் வாய்ப்பின் பெற்றுக் கொண்டு 25 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்திருந்தார்.

எட்டு வருட கனவு

கண்டி மடவளை மதீன மத்திய கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்பாது பி.ஆர்.சி.க்காக முதல்தர போட்டிகளில் விளையாடி வருபவருமான மொஹமத் ஷிராஸ், 119 முவகையான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 228 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

உள்ளக ஒருநாள் போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஸின் பந்து வீச்சு சராசரி 17.52 என காணப்படுகிறது.

21 வயதில் முதல் தர கிரிக்கெட்டை ஆரம்பித்த சிராஸ் எட்டு வருடங்களின் பின்னர் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

நடப்பு இலங்கை கிரிக்கெட் குழாமில் விஜயகாந்த் விஸ்காந்த்துக்கு அடுத்தபடியாக இலங்கை அணிக்குள் இணைந்த தமிழ் பேசும் வீரர் முகமது சிராஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version