காந்தாரா
கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான அறிவிப்பும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
காந்தாரா இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் முன் கதையை தான் பேசப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
காந்தாரா 2-வில் இவரா
இந்த நிலையில், காந்தாரா 2 படத்தில் மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளாராம்.
அவர் வேறு யாருமில்லை நடிகர் மோகன்லால் தான்.
ஆம், மலையாளம் மட்டுமின்றி உலகளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் மோகன்லால், காந்தாரா 2 திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
Source: https://cineulagam.com/article/mohanlal-in-kantara-2-movie-1727753668
