Home சினிமா மலையாள சினிமாவில் தொடரும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்.. நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் ராஜினாமா

மலையாள சினிமாவில் தொடரும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள்.. நடிகர் சங்கத்தில் இருந்து மோகன்லால் ராஜினாமா

0

பாலியல் குற்றச்சாட்டுகள்

மலையாள படத்திற்கு தமிழ் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் ஆவேஷம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற படங்கள் மலையாள சினிமாவை தாண்டி தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களை சம்பாதித்தது.

சூர்யாவை தொடர்ந்து மும்பையில் குடியேறிய பிரபல முன்னணி நடிகர்.. யார் தெரியுமா

இந்த நிலையில், தற்போது மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது தொடர்ந்து பாலியல் சுரண்டலுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுவும் மலையாள சினிமா இதில் உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும் அடுத்தடுத்து பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மோகன்லால் ராஜினாமா

இந்த நிலையில் தற்போது நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான சித்திக் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் புகார் செய்த நிலையில் அவர் ராஜினாமா செய்தார்.

அதை தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் தற்போது ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில்,கேரள நடிகர் சங்கமான அம்மா கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. இது மலையாள துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version