Home இலங்கை அரசியல் வடக்கு வைத்தியசாலைகளில் நடக்கும் ஊழல்கள் : சபையில் கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி

வடக்கு வைத்தியசாலைகளில் நடக்கும் ஊழல்கள் : சபையில் கேள்வியெழுப்பிய அர்ச்சுனா எம்.பி

0

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நடக்கின்ற பண மோசடி ஊழல்கள் தொடர்பாக மிகப்பெரிய விமர்சனங்கள் எழுப்பப்பட்ட போதிலும் அது குறித்து எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கைகளும் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் இயங்குகின்ற யாழ் போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி, பருத்தித்துறை, ஊர்காவற்துறை மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்ட வைத்தியசாலைகள் ஆகியவற்றிலே பொதுமக்களால் வழங்கப்படுகின்ற நன்கொடைகள் எந்த ஒரு கணக்காய்வு நடவடிக்கைகளும் இல்லாமல் நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க….

https://www.youtube.com/embed/lw2ojVFiqzk

NO COMMENTS

Exit mobile version