Home இலங்கை சமூகம் வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

வெளிநாட்டு மோகம் காட்டி பணமோசடி: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

0

தற்போது செயல்படாத கொரிய E8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எச்சரிக்கையானது, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

E-8 வேலைப் பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது தொடர்புடைய பயிற்சிக்காக எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம், தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கும் இதுவரை எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை என பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எச்சரிக்கை

இந்த நிலையில், எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனமோ, தனிநபரோ அல்லது தனிநபர் குழுவோ அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையான இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.    

NO COMMENTS

Exit mobile version