ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காகச் செலவிட்ட நிதித் தொகை தொடர்பான விபரங்களை அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று (15.11.2025) பாராளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி இதுவரையில் எட்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் பயணங்கள்
குறித்த 08 பயணங்களுக்காகவும் ஜனாதிபதி 14.09 மில்லியன் ரூபாயை செலவழித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-17 ஆம் திகதிகளுக்கு இடைப்பட்ட இந்தியப் பயணத்திற்கான செலவு 1.2 மில்லியன் ரூபாய்
2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதியன்று சீனப் பயணத்திற்கான செலவு 0.8 மில்லியன் ரூபாய்
2025 பெப்ரவரி மாதம் 10-13 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணத்திற்கான செலவு 0.5 மில்லியன் ரூபாய்
2025 மே மாதம் 04-06 ஆம் திகதி வரையிலான வியட்நாம் பயணத்திற்கான செலவு 1.9 மில்லியன் ரூபாய்
2025 ஜூன் மாதம் 11-13 ஆம் திகதிகளில் மேற்கொண்ட ஜேர்மனி பயணத்திற்கான செலவு 4.0 மில்லியன் ரூபாய்
2025 ஜூன் 28-30 ஆம் திகதிகளில் மாலைத்தீவு பயணத்திற்கான செலவு 0.7 மில்லியன் ரூபாய்
செப்டம்பர் மாதம் 23-26 ஆம் திகதிகளில் ஐக்கிய நாடுகள் சபை அமர்வுக்கான அமெரிக்கப் பயணத்திற்கும், அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் 5.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை இன்றைய தினம் (15.11.2025) அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
