Home இலங்கை குற்றம் விகாரைக்கு சென்ற பதின்ம வயது தேரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

விகாரைக்கு சென்ற பதின்ம வயது தேரருக்கு காத்திருந்த அதிர்ச்சி

0

அனுராதபுரத்தில் இளம் பராய தேரர் ஒருவரை தகாத செயற்பாட்டிற்கு உட்படுத்திய மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதான தேரரை 22 வயதான தேரர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தேவைக்காக விகாரைக்கு சென்ற வேளையில் தகாத செயற்பாடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேரர் கைது

துஷ்பிரயோகத்துக்குள்ளான தேரர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/monk-arrested-in-anuradhapura-today-1718724254

NO COMMENTS

Exit mobile version