Home இலங்கை சமூகம் திருகோணமலையில் மயானத்தில் பதற்றத்தை கிளப்பிய பிக்கு

திருகோணமலையில் மயானத்தில் பதற்றத்தை கிளப்பிய பிக்கு

0

திருகோணமலையில் (Trincomalee) ஜனாஸா நல்லடக்கத்திற்கு பௌத்த பிக்கு
தடை விதித்ததால் அப்பகுதியில் பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

குறித்த சம்பவம் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
புல்மோட்டை 02 – பொன்மலைக்குடா பகுதியில் இன்று (13) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “புல்மோட்டை காவல் பிரிவுக்குட்பட்ட பொன்மலைக்குடா பகுதியில்
ஆண் ஒருவர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார்.

அரிசிமலை விகாரை

இந்தநிலையில், குறித்த ஜனாஸாவை நல்லடக்கம்
செய்வதற்கு மயானத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள குறித்த காணியில் ஜனாஸா நல்லடக்கம்
இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஜனாஸா அடக்கத்திற்கு எதிராக புல்மோட்டை அரிசிமலை விகாரையின்
விகாராதிபதியினால் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளது.

அதன் அடிப்படையில் குறித்த ஜனாஸா நல்லடக்கத்தினை நிறுத்தக்கோரி புல்மோட்டை
காவல் நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குழப்ப நிலை
ஏற்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் 

இதனையடுத்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் கவனத்திற்கு குறித்த
விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து அவ்விடத்திற்கு வந்த பிரதேச செயலாளரின்
தடையீட்டினால் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதியும் குறித்த பகுதியில் ஜனாஸா
நல்லடக்கத்திற்காக குழி தோண்டப்பட்ட போது புல்மோட்டை அரிசிமலை விகாரையின்
விகாராதிபதி குறித்த காணி “பூஜா பூமி” என புல்மோட்டை காவல்துறையினர் சிலரை
அப்பகுதிக்கு அனுப்பி ஜனாஸா நல்லடக்கத்தை தடை செய்திருந்தார்.

இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் தோன்றிய நிலையில் குறித்த விடயம் பிரதேச செயலாளர் உட்பட
பலருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் குறித்த பகுதியில் ஜனாஸா
நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version