Home இலங்கை சமூகம் இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம்: அரசாங்கத்தை எச்சரித்த தேரர்

இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம்: அரசாங்கத்தை எச்சரித்த தேரர்

0

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை எனில் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடுவோம் என ராகுல ஹிமி தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே இது தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய, இது தொடர்பில் தெரிந்துகொள்ளவேண்டும்.

நீதிக் கட்டமைப்பு

மாணவியின் மரணம் தொடர்பில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபரை விசாரித்து, விடயம் தொடர்பான உண்மைகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துங்கள்.

மாணவியின் மரணத்திற்கு காரணமான அனைவரும் இந்த நாட்டின் நீதிக் கட்டமைப்பின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு, உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் வீதிக்கு இறங்கி பாரிய போராட்டம் ஒன்றை நடத்துவோம்.

அத்துடன், எதிர்காலத்தில் இது போன்று இன்னொரு சம்பவம் நடக்காத அளவுக்கு நீதிக் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version