திருகோணமலை – தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை
அதிகரித்துள்ளதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர்.
குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவுகளை உட்கொள்வதோடு வீட்டு
உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்து வருகின்றன.
மக்களின் கோரிக்கை
அத்தோடு வீட்டு காணிகளில் உள்ள பயன்தரும் மரங்களில் காணப்படும் பூக்கள,
பழங்கள் உள்ளிட்டவைகளை சாப்பிட்டு செல்வதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் வீடுகளில் சிறு பிள்ளைகளை வைத்திருப்பது கூட அச்சமாக உள்ளதாக
பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
