Home ஏனையவை வாழ்க்கைமுறை மழை காலத்திலும் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்கள்

மழை காலத்திலும் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா! இதை மட்டும் செய்யுங்கள்

0

சுட்டெரிக்கும் வெயில்காலம் முடிந்து கொட்டும் மழை ஆரம்பித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு எமது சருமத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.

சரியான சரும பராமரிப்பு பின்பற்றுவதன் மூலமாக பளபளப்பான சருமத்தை மழைக்காலத்திலும் நம்மால் பெற முடியும்.

எனவே மழைக்காலத்தில் எவ்வாறு சருமத்தை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

இரவில் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால் இவ்வளவு நன்மைகளா..!

சரும சுத்தம்

மழைக்காலத்தில் நமது சருமம் அதிகப்படியான ஈரப்பதத்திற்கு வெளியிடப்படுவதால் சரும துளைகள் அடைக்கப்பட்டு, அதனால் எளிதாக முகப்பரு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

எனவே,
இதனை எதிர்க்க, சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்கு, வியர்வை மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்வது அவசியம்.

உங்கள் சரும வகைக்கு ஏற்ற மென்மையான கிளன்சர் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை சருமத்தை சுத்தம் செய்யுங்கள்.

கூடுதலாக இதன் பிறகு டோனர் பயன்படுத்துவது மீதமிருக்கக்கூடிய அழுக்குகளை நீக்குவதோடு, சருமத்தின் pH அளவை பராமரிக்க உதவும். இதனால் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கட்டுக்கடங்காத முடி வளர்ச்சிக்கு கற்றாழையை இப்படியும் பயன்படுத்தலாமா!

மாய்ஸரைசர் பயன்படுத்தல்

மழைநீர் மற்றும் ஈரப்பதமானது சருமத்தில் இருக்கக்கூடிய இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி அதனை சோர்வாகவும், வறண்டதாகவும் மாற்றிவிடும்.

எனவே பளபளப்பான சருமத்திற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது உங்கள் சருமம் மற்றும் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற மென்மையான மாய்ஸரைசர் பயன்படுத்துவது சருமத்தில் இருக்கக்கூடிய வறட்சியை போக்க உதவும்.

முடிந்தவரை நீர் சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.

சருமத்தின் அழகு

சரும பராமரிப்பு வழக்கத்தில் எக்ஸ்ஃபோலியேஷன் மிகவும் முக்கியமான ஒரு படியாக கருதப்படுகிறது.

அதிலும் மழைக்காலத்தில் இதனை தவறாமல் பயன்படுத்துவது அவசியமாகும்.

அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக சருமத்தில் ஏராளமான இறந்த செல்கள் படிந்து இருக்கக்கூடும்.

இது சருமத்தின் அழகை முற்றிலுமாக கெடுத்து விடும். எனவே, வாரம் ஒரு முறை அல்லது இரு முறை சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை அகற்றுவது அவசியம்.

மென்மையான எக்ஸ்போலியேட்டர் பயன்படுத்துவதன் மூலம் எரிச்சல் மற்றும் சேதத்தை தவிர்க்கலாம்.

சன் ஸ்கிரீன் பயன்படுத்தல் 

சரும சேதம் மற்றும் முன்கூட்டிய வயதான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய UV கதிர்களிடமிருந்து மழைக்காலத்திலும் நமது சருமத்தை பாதுகாப்பது அவசியம்.

எனவே உங்கள் மழைக்கால சரும பராமரிப்பு வழக்கத்தில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமாகும்.

வீட்டை விட்டு வெளியேறும் பொழுது SPF 30 அல்லது அதற்கும் அதிகமான சன்ஸ்கிரினை முகம் மற்றும் சூரிய கதிர்களுக்கு வெளிப்படக்கூடிய பகுதிகளில் பயன்படுத்தவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மழைக்காலத்திலும் பளபளப்பான சருமத்தை பெறலாம்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

NO COMMENTS

Exit mobile version