Home இலங்கை சமூகம் முன்னாள் சபாநாயகர் ஒருவர் தொடர்பில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

முன்னாள் சபாநாயகர் ஒருவர் தொடர்பில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்

0

முன்னாள் சபாநாயகர் ஒருவரின் மாதந்திர உணவு கட்டணம் மாத்திரம் மூன்றரை லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த தகவலானது, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட கணக்காய்வு அறிக்கை மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பந்தப்பட்ட கணக்காய்வின் முழு அறிக்கையையும், பிரதி கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பில நேற்று(17) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஒப்படைத்துள்ளார்.

அம்பலமாகப்போகும் முக்கிய விபரங்கள்

அத்துடன், இந்த அறிக்கை வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் ஒன்பது திணைக்களங்களிலும் நடந்த முறைகேடுகள் குறித்து பல முக்கிய விபரங்களை அது வெளிப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version