நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மொறவெவ பிரதேச செயலகத்தில்
கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று(17) கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நியாயமான வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்து, NPP அரசே இடமாற்றத்தில் இடம்பெறும் பாரபட்சங்களை நிறுத்து,
அவசியம் இடமாற்றம் வேண்டும், வேலை கிடைத்தது முதல் ஓய்வு காலம் வரை இங்குதானா போன்ற பதாகைகளை ஏந்தி எவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை
முன்னெடுத்தனர்.
பல வருட காலமாக மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவில் இடமாற்றம் கிடைக்காமல் பலர்
இருக்கும் போது, சிலர் நகர் பகுதில் வேலை செய்ய வேண்டும் என்ற ரீதியில் இந்த இடமாற்றத்தினை நிறுத்தியுள்னர்.
இடமாற்றம் அவசியம்
முறையான நடைமுறைப்படுத்தபட்ட இடமாற்றம் அவசியம் தேவை என்று அனைத்து
உத்தியோகத்தர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
