Home இலங்கை சமூகம் நாட்டு மக்களுக்கு கிடைக்கவுள்ள பல நிவாரணங்கள் – அரசாங்கம் தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு கிடைக்கவுள்ள பல நிவாரணங்கள் – அரசாங்கம் தெரிவிப்பு

0

எதிர்வரும் சில மாதங்களில் நாட்டு மக்களுக்கு பெருமளவு நிவாரணம் கிடைக்கும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகள் தற்போது பலன்களை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

முட்டை இறக்குமதி

முட்டை உற்பத்தி குறையும் போது முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அவ்வாறு இல்லை என்றால் உற்பத்தியாளர் தமது பொருட்களை சரியான விலையில் வழங்கி நுகர்வோரை பாதுகாக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உணவுப் பாதுகாப்பு பொறுப்பு தமக்கு இருப்பதால், முட்டை உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தாம் தலையிட்டு தீர்வு காண முயற்சித்ததாக அமைச்சர் கூறினார்.

மேலும், சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், எரிவாயு நிறுவனம் நிதி அமைச்சின் கீழ் உள்ளதால், வாடிக்கையாளர் தரப்பில் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் முறைப்பாடுகள் வந்தால் அது குறித்து விவாதிப்போம் என்றார்.

தற்போதைய நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். அதனை குறித்த நிறுவனம் சரியான தீர்வினை வழக்காத பட்சத்தில், அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

NO COMMENTS

Exit mobile version