Home இலங்கை சமூகம் செம்மணியில் அடுத்தடுத்து வெளிவரும் எலும்புக்கூடுகள்: தீவிரப்படுத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கை

செம்மணியில் அடுத்தடுத்து வெளிவரும் எலும்புக்கூடுகள்: தீவிரப்படுத்தப்பட்ட அகழ்வு நடவடிக்கை

0

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித
எலும்புக்கூட்டு தொகுதிகளும் மேலும் சில சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் இரண்டாம் நாள்
பணிகள் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த எலும்புக்கூட்டு தொகுதிகளும் மற்றும் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

எலும்புக்கூட்டு தொகுதிகள்

அதேவேளை 26 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகள்
அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக, 45 நாட்கள் அனுமதி
கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தநிலையில், 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள்
நடைபெற்று, பின்னர் சிறு கால இடைவெளியின் பின்னரே பணிகள் ஆரம்பிக்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version