Home இலங்கை சமூகம் இலங்கையில் திடீரென வேலைகளை விட்டு வெளியேறியுள்ள இலட்சக்கணக்கானோர்

இலங்கையில் திடீரென வேலைகளை விட்டு வெளியேறியுள்ள இலட்சக்கணக்கானோர்

0

இலங்கையில் விவசாயத்துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச்சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

 

நாட்டில் விவசாயத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் விவசாய நடவடிக்கையை விட்டு வெளியேறி வருவதுடன் நாட்டுக்குத் தேவையான விவசாயப் பொருட்களின் உற்பத்தி குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயத் துறையில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,187,563 ஆக இருந்தது.

இது 2024 முதல் காலாண்டில் 2,139,574 ஆகக் குறைந்துள்ளது.

 

விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு மொத்த வேலைவாய்ப்பில் 26.7% ஆக இருந்தது.

ஆனால் 2024 முதல் காலாண்டில், இது 25.8% சரிவைக் காட்டியுள்ளது.

இதன்படி, கடந்த ஒரு வருடத்தில் விவசாயத் துறையில் சுமார் 147,989 பேர் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்படும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

NO COMMENTS

Exit mobile version