தொடருந்து இயக்குநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வராததால் இன்று (14) பிற்பகல் வரை 20க்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்து செய்யப்பட்ட தொடருந்து பயணங்களின் எண்ணிக்கை இன்று பிற்பகலுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெசாக் விடுமுறைக்குப் பிறகு தொடருந்து இயக்குநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வரவில்லை என்றும், இயக்குநர்களை மீண்டும் பணிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சிரமத்திற்கான காரணம்
இந்த நிலையில், தொடருந்துகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அலுவலக ஊழியர்கள் உட்பட தொடருந்து பயணிகள் இன்று (14) கடுமையாக சிரமத்திற்கு ஆளானதாக குறிப்பிடப்படுகிறது.
தொடருந்து இயக்குநர்கள் மற்றும் நடத்துனர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது இந்தப் பிரச்சினை எழுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
