Home இலங்கை சமூகம் சீரற்ற வானிலையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு..! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

சீரற்ற வானிலையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு..! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

0

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக கொழும்பு, களுத்துறை கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை

அனர்த்த நிலைமை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் 233 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 09 மாவட்டங்களின் 47 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை

மேலும், வெள்ளம் காரணமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபன்ன இடைமாறல் திறக்கப்பட்டுள்ளதுடன், கடவத்தையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் கடுவலையிலிருந்து வெளியேறுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

கடுவலையிலிருந்து கடவத்தைக்கு கனரக வாகனங்கள் மாத்திரமே பிரவேசிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மழையினால் தொடருந்து மார்க்கம் நீரில் மூழ்கியதன் காரணமாக புத்தளம் தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்து லுணுவில வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version