கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அப்பகுதியிலுள்ள 8000 மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன.
பரட்டைக்காடு, செட்டிக்காடு, தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் பத்து நாட்களான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி
அழிந்துவிட்டன.
விவசாய நடவடிக்கைகளை பாதிக்கும் அச்சுறுத்தல்
வெள்ளம் வடிந்த பின் வயல் நிலங்கள் முழுவதும் மணலும், சேறும் படிந்துள்ளதால்,
விவசாயிகள் தாம் பெரும் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த சேதம் அடுத்த போக விவசாய நடவடிக்கைகளையும் பாதிக்கும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணங்களை
வழங்குவதுடன், வயல் நிலங்களை சீரமைக்க நீர்ப்பாசனத்திணைக்களம், விவசாய
அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியன விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
என விவசாயிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
