Home இலங்கை சமூகம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை பிரேத அறை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை பிரேத அறை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் ஒரு பிரேத அறை இல்லாமல் காணப்படுகிறது. இது
உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர்
எச்.தாலிப் அலி தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு நேற்று (14) கருத்து வெளியிடும் போதே
இவ்வாறு தெரிவித்தார்.

சிரமத்தில் மக்கள் 

ஒரு சம்பவம் நடந்த நிலையில் உயிர் சேதம் ஏற்பட்டு உரிய
சடலம் பாதுகாப்பாக வைத்து விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை
அதற்கான பிரேத அறை இன்மையால் பல இன்னல்கள் ஏற்படுகின்றன.

அண்மையில் இடம்பெற்ற
சம்பவம் ஒன்றின் போதும் சடலம் இரவு 11 மணியளவில் இருந்து மறு நாள் காலை
10.00 மணி வரை இருந்துள்ளன.

இதன் தேவைப்பாடு தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு
குழு கூட்டத்திலும் பேசப்பட்டுள்ளது ஆனால் தீர்வில்லாமல் உள்ளது. இது உடனடியாக
செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version