Home இலங்கை சமூகம் வாழைச்சேனையில் மோட்டார் குண்டு மீட்பு

வாழைச்சேனையில் மோட்டார் குண்டு மீட்பு

0

மட்டக்களப்பு கிரான் கருங்காளியடி பிரதேசத்தில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடி அகற்றும் மெகா அமைப்பினர் குறித்த குண்டை நேற்றுமுன்தினம்(12.11) மீட்டதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இயங்கி வந்த இராணுவ முகாம்; அங்கிருந்து தற்போது வெளியேறியதையடுத்து காணி உரிமையாளர்களிடம் காணிகளை இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளனர்.

நீதிமன்ற அனுமதி

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட காணிகளில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியை வவுனியாவை தலைமையகமாக கொண்டு இயங்கிவரும் மெகா (ஆயுபு) கண்ணிவெடிகளை அகற்றும் அமைப்பு மேற்கொண்டு வந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு குண்டை மீட்டு அழிப்பதற்கு நீதிமன்ற நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version