Home இலங்கை சமூகம் இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு

0

இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை விளக்கீடு
இன்றாகும்.

இந்தநிலையில், நேற்றைய தினம்(3) குமராலய தீபம் நாளை முன்னிட்டு முருகன் ஆலயங்களில்
விசேட பூஜை வழிபாடுகள் முன்னெக்கப்பட்டன.

விசேடமாக இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து
மீண்டுவரவும் மீண்டும் ஒரு இயற்னை அனர்த்தம் ஏற்படாதிருக்கவும்
உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் இதன்போது விசேட பிரார்த்தனைகள்
ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விளக்கீடு

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நேற்று இரவு குமராலய
தீபத்திருநாள் வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.

ஆலயம் முழவதும் தீபங்கள் ஏற்றப்பட்டு முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகம்
மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதுடன் ஆலயத்திற்கு முன்பாக
அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டு வழிபாடுகள் அமைதியான முறையில்
முன்னெடுக்கப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version