Home இலங்கை சமூகம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான அறிவிப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வெளியான அறிவிப்பு

0

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு 02 நாட்களுக்கு முன்பும் பிரசவத்திற்கு 07 நாட்களுக்குப் பிறகும் சிக்குன்குனியா அறிகுறிகள் தோன்றினால், குழந்தைக்கும் அந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, அதன்படி, பிரசவத்திற்குப் பிறகு தாய் மற்றும் சேய் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகப்பேறியல் மற்றும் மருத்துவ பீடத்தின் பேராசிரியர் பிரபோதன ரணவீர தெரிவித்தார்.

இன்று (11) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

 சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்

இருப்பினும், சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்க்கு பிரசவத்திற்கு அறுவைச் சிகிச்சை தேவையில்லை என்றும், நோயால் ஏற்படும் உடல் ரீதியான அசௌகரியத்தைத் தவிர, அது ஆபத்தானது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரசவத்திற்குப் பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும் என்றும் பேராசிரியர் வலியுறுத்தினார்.

 கருச்சிதைவுகள் மற்றும் கருப்பையிலேயே குழந்தையை இழக்க நேரிடும்

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் சில சமயங்களில் கருச்சிதைவுகள் மற்றும் கருப்பையிலேயே குழந்தையை இழக்க நேரிடும், எனவே இந்த நோயைத் தடுக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியர் பிரபோதன ரணவீர மேலும் கூறினார்.

 

NO COMMENTS

Exit mobile version