Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் அன்னை பூபதியின் சமாதியில் நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் சமாதியில் நினைவேந்தல் நிகழ்வு

0

அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலையொட்டி மட்டக்களப்பு நாவலடியிலுள்ள அவரது சமாதியில்  நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று (19.04.2024) சமய கிரியைகளுடன் சுடர் ஏற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினைரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச
கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலைய
முன்றலில் மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்சியாக ஈடுபட்டு
ஏப்ரல் 19 ஆம் திகதி உயிர் நீத்தார்.

கிளிநொச்சியில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

36வது ஆண்டு நினைவேந்தல்

இந்த நிலையில் அவரது 36 வது ஆண்டு நினைவேந்தலையொட்டி அவரது சமாதியில் இன்று
காலை 10 மணியளவில் அவரது மகள், மற்றும் அப்போது அவருடன் உண்ணாவிரதத்தில்
ஈடுபட்ட அன்னையர் முன்னணி மட்டு,அம்பாறை தலைவி கலைவாணன் பவளராணி உட்பட
உறவினர்கள் கலந்து கொண்டு சமய கிரிகைகளுடன் அன்னையின் சமாதிக்கு மலர் தூவி
மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சிறீதரனுக்கு எதிரான உள்ளக நகர்வுகள் : முடிவை மறுத்த சுமந்திரன்

இசைஞானி இளையராஜா இலங்கை வருகை

யாழில் கடற்கரையில் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க புதிய திட்டம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version