Home இலங்கை குற்றம் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தாய் பரிதாப மரணம்!

மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தாய் பரிதாப மரணம்!

0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் மகன் தாக்கியதில் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம் (6) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த 65 வயது மதிக்கத்தக்க பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், குறித்த பெண் உயிரிந்துள்ளார்.

இதையடுத்து குறித்த மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/mother-dies-after-son-hits-her-in-batti-1743936799

NO COMMENTS

Exit mobile version