Home இலங்கை குற்றம் இளம் தாயின் விபரீத முடிவு – அதிரடியாக செயற்பட்டு காப்பாற்றிய பொலிஸார்

இளம் தாயின் விபரீத முடிவு – அதிரடியாக செயற்பட்டு காப்பாற்றிய பொலிஸார்

0

ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியகத்தில் மூன்று பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு விபரீத முடிவை எடுக்கவிருந்த தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸ் மகளிர் பணியக அதிகாரிகள் தாயை காப்பாற்றி டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


தாயின் விபரீத முடிவு

முன்னதாக ஹட்டன் டிக்கோயாவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இவர், தனது கணவருடன் வாழ முடியாது என ஹட்டன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், முறையே 08, 06, 04 வயதுடைய இரண்டு ஆண் குழந்தைகளும் மற்றும் ஒரு பெண் குழந்தையை பொலிஸார் தமது பொறுப்பில் எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

பொலிஸ் காவலில் பிள்ளைகள்

பின்னர் தொடருந்து நிலையத்தை நோக்கி சென்ற போது அவர் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் மூன்று குழந்தைகளையும், அவர்களின் தந்தையிடம் ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version