Home இலங்கை சமூகம் வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டார் குண்டு மீட்பு

வவுனியா – தாண்டிக்குளத்தில் மோட்டார் குண்டு மீட்பு

0

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்று காணி ஒன்றில் இருந்து மோட்டார்
குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் குண்டானது நேற்று(10.09.2024) மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கை

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றினை அதன் உரிமையாளர்
துப்பரவு செய்த போது குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான வெடி பொருள்
இருப்பதை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து, வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்திற்கு
வருகை  தந்த பொலிஸார் வெடி பொருளை பார்வையிட்டதுடன், அது மோட்டார் குண்டு என உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன் பின்னர், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மோட்டார் குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கையை வவுனியா
பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version