Home இலங்கை குற்றம் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

0

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் மூவர் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட நான்கு மில்லியன் ரூபாவை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இரண்டு உத்தியோகத்தர்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவர் மற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் ஜூன் மாதம் 05ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Source: https://tamilwin.com/article/motor-dept-officers-remanded-1748045323

NO COMMENTS

Exit mobile version