Home இலங்கை சமூகம் தமிழரசுக் கட்சி வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் பறிமுதல்!

தமிழரசுக் கட்சி வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் பறிமுதல்!

0

வவுனியா (Vavuniya) வீரபுரம் பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த
தமிழரசுக் கட்சியின் வன்னிமாவட்ட வேட்பாளரின் மோட்டார்சைக்கிள் காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செட்டிகுளத்தை சேர்ந்த வேட்பாளரான ஜெகன் சிவானந்தராசா என்பவரது
மோட்டார்சைக்கிளே இவ்வாறு நேற்றயதினம் (21)
இரவு காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார், நேற்றையதினம் இரவு எட்டு மணியளவில் மின்குமிழ் செயற்படாத காரணத்தால் வீரபுரம்
கிராமத்தின் உப தபால் கந்தோருக்கு அருகாமையில் வீதியோரமாக எனது
மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வவுனியா சென்றிருந்தேன்.

முறைப்பாடு 

மீண்டும் அதனை எடுக்கச்சென்ற போது அந்த பகுதிக்கு வந்த செட்டிகுளம் காவல்துறையினர்,
மோட்டார்சைக்கிளை எடுக்க விடாது தடுத்ததுடன், எனது சாரதி
அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுக்கொண்டு மோட்டார்சைக்கிளை
எடுத்துச்சென்றனர்.

நான் எந்தவித குற்றமும் செய்யாமல் எனது மோட்டார் சைக்கிள்
மற்றும் ஆவணங்களை அவர்கள் பெற்றுச்சென்றுள்ளனர்”

இந்நிலையில் இது தொடர்பாக தேர்தல் அலுவலகத்தில் முறைப்பாடு
பதிவுசெய்துள்ளத்துடன்,மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டினை
பதிவுசெய்யவுள்ளதாக மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

Source: https://ibctamil.com/article/motorcycle-of-the-candidate-of-itak-seized-1729522023

NO COMMENTS

Exit mobile version