Home இலங்கை சமூகம் கோட்டை – மருதானை தொடருந்து சேவைகள் பாதிப்பு

கோட்டை – மருதானை தொடருந்து சேவைகள் பாதிப்பு

0

கொழும்பு(Colombo) – கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மருதானை வழியாக பயணிக்கும் அனைத்து தொடருந்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோட்டை தொடருந்து நிலையத்திற்கு அருகில், உள்ள வழிதடத்தை மாற்றுவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே  கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மருதானை வரையான தொடருந்து சேவை இன்று(21) பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

 சீரமைக்கும் பணி

இந்நிலையில், தற்போது பராமரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் தொடருந்து சேவை சீரமைக்கப்படும் எனவும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், கொழும்பு வரும் அலுவலக தொடருந்தும் தாமதமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/colombo-cotta-train-service-1729490658

NO COMMENTS

Exit mobile version