கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் வைத்து காவல்துறை பரிசோதகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பத்தில் மூத்த சட்டத்தரணியை கைது செய்ய மூன்று காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த சட்டத்தரணியை கைது செய்ய மூன்று வீடுகளுக்கு சென்ற போதிலும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அவர் நீதிமன்றத்தையும் காவல்துறையையும் புறக்கணித்து வருவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்ய நடவடிக்கை
அவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்ற வளாகத்திற்கு வரும் சிறைச்சாலைப் பேருந்துக்கு வழி வகுக்க, நீதிமன்ற வளாகத்தில் இருந்து சட்டத்தரணி ஒருவரின் காரை அகற்ற முயன்றபோது, குறித்த சட்டத்தரணிக்கும், காவல்துறை பரிசோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், காவல்துறை பரிசோதகரை நேற்றைய தினம் (14.10.2025) பிணையில் செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும், கல்கிஸ்ஸை காவல்துறை தலைமையக காவல்துறை பரிசோதகர் எச்.டி.எம். துஷார உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் பொதுப் பணிகளுக்காக மருத்துவ சேவைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
[6A7LQAU
]
