Home இலங்கை சமூகம் தங்க வியாபார மோசடி குறித்து வெளியான தகவல் : மறுக்கும் ஹிஸ்புல்லாஹ் தரப்பு

தங்க வியாபார மோசடி குறித்து வெளியான தகவல் : மறுக்கும் ஹிஸ்புல்லாஹ் தரப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் (M. L. A. M. Hizbullah) தங்க வியாபாரத்தில் ஏமாற்றப்பட்டதாக கானா ஊடகங்களில் வெளிவந்ததாகக் குறிப்பிட்டு, பல இலங்கை ஊடகங்களில் வெளியான செய்தியை அவரது ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது.

அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்று ஹிஸ்புல்லாஹ் ஊடகப்பிரிவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மைச் சம்பவம் குறித்து பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

 

கானா நாட்டிற்கு  விஜயம்

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார்.

அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர், உடனடியாக இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, அவரை ஏமாற்ற முயன்ற 11 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தவிர, ஹிஸ்புல்லாவுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை” என்று ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்ள்ளது.

NO COMMENTS

Exit mobile version